ஆற்காடு அருகே அம்மன் கோவிலில் இடி தாக்கியதில் சிலைகள் சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2016 12:09
வேலூர்: ஆற்காடு அருகே, அம்மன் கோவில் மீது இடி தாக்கியதில் சிலைகள் சேதமடைந்தன. ஆற்காடு அடுத்த ஆயிலம் கிராமத்தில், முத்தாளம்மன் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, அப்பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, கோவில் மீது இடி விழுந்தது. இதில் கோவில் கோபுரத்தில் இருந்த சுவாமி சிலை மற்றும் கோவிலில் இருந்த அம்மன் சிலை சேதமடைந்தன. மேலும் கோவிலில் இருந்த, பத்து தென்னை மரங்கள் மீதும் இடி விழுந்தன. நேற்று காலை, 8:00 மணிக்கு கோவிலுக்கு வந்த பூசாரி காளிங்கராயன், கோவில் மீது இடிதாக்கி சுவாமி சிலைகள் சேதம் அடைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, காலை, 11:00 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.