பதிவு செய்த நாள்
30
செப்
2016
12:09
குன்னுார் : குன்னுார் அருகே, உள்ள வெலிங்டனில் போகி தெரு பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. தொடர்ந்து, 2ம் தேதி காலை, 9.30 மணிக்கு அபிஷேக ஆராதனை யும் பகல்,12:00 மணிக்கு உச்சி பூஜையும் நடக்கிறது. 7ம் தேதி காலை,9:00 மணிக்கு மாரியம்மன் ஆலயத்திலிருந்து சீர் தட்டு எடுத்து வருதலும், 10:00 மணிக்கு அபிஷே ஆராதனையும்,12:00 மணிக்கு மகா தீபாரதனையும் நடக்கிறது. மாலை,6:30 மணிக்கு பூ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கரகம், திருவீதி உலா நடக்கிறது. தொடர்ந்து, 12ம் தேதி மஞ்சள் நீராட்டல் நடக்கிறது.