பதிவு செய்த நாள்
30
செப்
2016
12:09
நாமக்கல்: சிதிலமடைந்த, 96 ஆண்டு பழமையான முத்துக்குமார சுவாமி கோவிலை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நகர காங்கிரஸ் சார்பில், செயல்வீரர்கள் கூட்டம், ராசிபுரம் அடுத்த, வெண்ணந்தூரில் நடந்தது. நகரத் தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். வெண்ணந்தூரில், 1920ல் கட்டப்பட்ட முத்துக்குமார சுவாமி கோவில் உள்ளது. கோவில் கட்டி, 96 ஆண்டுகள் முடிந்துள்ளதால், மிகவும் சிதிலமடைந்துள்ளது. கோவில் கும்பாபிஷேகம் செய்து, 56 ஆண்டுகளாகிறது. அதனால், கோவிலை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரம்பாலிக் ஒலிம்பிக் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பாராட்டுக்கள். காவிரி பிரச்னையில், வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள இரு மாநில மக்களின் உடமைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.