தற்போது இருப்பது போலவே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஏழு அதிசயங்கள் உலகில் இருந்தன. அதில் ஒன்று இஸ்ரேல் நாட்டில் எபேசுபட்டணம் என்ற ஊரில் இருந்த தியானாள் கோயில். இக்கோவில் மண்ணில் மூழ்கி அழிந்து விட்டது. ஜெ.டி.உட்ஸ் என்ற அகழ்வாராய்ச்சியாளர் இக்கோவிலை கண்டுபிடித்தே தீருவதென முடிவெடுத்து தோண்ட ஆரம்பித்தார். முதல் ஆறு ஆண்டுகள் தோண்டியதில் கோவில் உள்ளே இருப்பது தெரிய வந்தது. மேலும் ஐந்து ஆண்டுகள் தோண்டியதும் முழுக்கோவிலும் வெளிப்பட்டது. இக்கோவில் ஈரடுக்கு மாடி கொண்டது. மாடியைத் தாங்க 118 துõண்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துõணும் 60 அடி உயரம், ஆறடி அகலம் கொண்டதாக இருந்தது. அக்கால உலக அதிசயங்கள் வரிசையில் இது சேர்ந்தது.