நபிகள் நாயகம் தனது தோழர் ஒருவரிடம் சொன்னது இது. “அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். இந்த இறையச்சம் உமது மார்க்கம் முழுவதையும், உம் விவகாரங்கள் அனைத்தையும் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்கும். திருக்குர்ஆன் ஓதுவதையும், இறைவனை நினைவு கூர்வதையும் வழக்கமாக்கிக் கொள்வீராக,”.ஆம்...இறைவனுக்கு பயந்து, குர்ஆன் சொல்லும் கருத்துக்களை பின்பற்றி வந்தால் வாழ்வில் உயர்வு நிச்சயம்.