மெக்காவில் நபிகள் நாயகம் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது, நாயகத்திற்கு குர்ஆன் மொழிகள், இறைவனால் அறிவிக்கப்பட்டன. ஒருமுறை அல்லாஹ் சொன்ன வாக்கியங்கள் இவை. “என்னிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் விஷயத்தில் அல்லாஹ் வழியைக் காட்டியுள்ளான். திருமணமானவர் திருமணமானவருடன் விபச்சாரம் செய்தால், திருமணமானவரை நுõறு கசையடியும், கல்லாலும் அடிக்க வேண்டும். திருமணமாகாதவர் திருமணமாகாதவரோடு விபச்சாரம் செய்தால் நுõறு கசையடியோடு, ஒரு வருடம் ஊர் நீக்கம் செய்ய வேண்டும்”. இவ்வளவு கடுமையான தண்டனை இருந்தால் தான் விபச்சாரத்தை ஒழிக்க முடியும் என இறைவனே சொன்ன பிறகு, கொடிய தவறு செய்பவர்களுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என்பதில் என்ன கருத்து வேறுபாடு இருக்க முடியும்!