“உனது சகோதரன் அநியாயம் செய்பவனாக இருந்தாலும், அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனுக்கு நீ உதவி செய்,” என்கிறது இஸ்லாம். நபிகள் நாயகம் கடைசி பேருரை ஆற்றிக்கொண்டிருந்த போது, ஒரு மனிதர், “அல்லாஹ்வின் துõதரே! அநீதியிழைக்கப்பட்டவனுக்கு உதவி செய்யலாம். அநியாயம் செய்தவனுக்கு எப்படி உதவுவது?” எனக் கேட்டார். அதற்கு நாயகம், “அநியாயம் செய்வதில் இருந்து அவனைத் தடுக்க வேண்டும். அதுவே நீ அவனுக்கு உதவும் வழியாகும்,” என்றார்.