ஆந்திர மாநிலம், சித்தூர் அருகில் வேப்பஞ்சேரியில் திருமாலின் மடியில் அமர்ந்தவண்ணம் தரிசனம் தருகிறாள் மகாலட்சுமி. இக்கோயிலில் அஷ்டலக்ஷ்மிகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. போதைக்கு அடிமையானவர்கள் அஷ்டலக்ஷ்மிகளை வலம் வந்து வழிபட, அப்பழக்கத்திலிருந்து விடுபடுகின்றனர். இங்கு இருபத்தோறடி உயரத்தில், திருமாலின் தசாவதாரங்களும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு.