கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத்சங்கம் சார்பில் வள்ளலார் அவதாரத்திருவிழா நடந்தது. கண்டாச்சிபுரம் சத்சங்கத்தின் சார்பில் சன்மார்க்கப் பொதுக்கூட்டம் நடந்தது. திருப்பத்துார் கம்பன் கழகத் தலைவர் அரிமா ரத்தின நடராஜன் தலைமை தாங்கினார். ஓதுவார் முருகவேல், அருட்பா பாடல்களைப் பாடினார். கண்டாச்சிபுரம் சத் சங்கச்செயலர் வசந்தராயன் வரவேற்றார். பின்னர், வள்ளலாரும், நால்வரும் என்ற தலைப்பில், கருணாகரன் பேசினார். இதில் பழனியாண்டி, சிவலிங்கம், கந்தசாமி, ஆறுமுகம், குப்புசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து அருட்பா இசையுடன் வள்ளலார் உருவப்பட ஊர்வலம் நடந்தது. தமிழ் வேதவார வழிபாட்டுச்சபையினர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.