சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே சாமியார் ஒருவர் மரக்கட்டையில் ஆணி அடித்துக்கொண்டு வினோத வழிபாடு நடத்தினார். சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கன்னி, 46. கிறிஸ்தவ ரான இவர் சில ஆண்டுகளுக்கு முன் வடகாட்டுப்பட்டி அருகே ராகவேந்திரா தியான மடம் ஆரம்பித்தார். இவரிடம் இப்பகுதியை சேர்ந்த பலரும் அருள்வாக்கு கேட்டு செல்வதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று சிலுவையை போன்ற இரண்டு மரக்கட்டைகளில் ஏறி நின்று இரண்டு கை, கால்களில் ஆணி அரைந்து கொண்டு தவம் இருப்பதாக தகவல் பரவியது. வேளாங்கன்னி கூறியதாவது,உலக நன்மைக்காகவும், மழை பெய்யும் வரையும் இவ்வாறு தவம் இருப்பேன் என்றார். ஒரு வருடத்திற்கு முன்பு அரிவாள் மீது ஏறிநின்று அருள்வாக்கு கூறியதாக இப்பகுதியினர் தெரிவித்தனர்.