கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேர்திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2016 12:10
ஈரோடு: ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், தேர்த்திருவிழா நேற்றிரவு கிராமசாந்தியுடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, 10ம் தேதி வரை காலையில் யாகசாலை பூஜை, திருமஞ்சனம் நடக்கிறது. தேரோட்டம், 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு நடக்கிறது. மகா அபிஷேகம், மஞ்சள் நீருடன், 14ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.