அன்னுார்: அன்னுார் அருகே உள்ள சொக்கம்பாளையம் செல்வ விநாயகர் கோவிலில் 49வது ஆண்டு நவராத்திரி அன்னதான விழா அக்.,1ல் கொலு பூஜையுடன் துவங்கியது. 2 முதல் 5ம் தேதி வரை தினமும் இரவு அலங்கார பூஜையும், பஜனையும் நடந்தது. நேற்று முன் தினம் தேசிய வித்யா சாலை மாணவ, மாணவியருக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் முருகன் வரவேற்றார். சீருடைகளை செயலாளர் திருவேங்கடம் வழங்கினார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை, சுருதி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். நேற்று மாதர் சங்கம் சார்பில், 108 திருவிளக்கு வழிபாடு நடந்தது. பின்னர் குடும்ப மகிழ்ச்சிக்கு காரணம் விட்டுக் கொடுப்பதிலா? தட்டிக் கேட்பதிலா? என்னும் தலைப்பில், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தேவராஜன் தலைமையில் பட்டிமன்றம் நடந்தது. வரும் 10ல் வாணவேடிக்கையுடன் அம்மன் அழைப்பும், இரவு பட்டி மன்றமும் நடக்கிறது. 11ல் மேட்டுப்பாளையம் வாசுதேவன் குழுவின் சிறப்பு பஜனை நடக்கிறது.