நவராத்திரி ஏழாம் நாள்... மதுரை மீனாட்சி திக்விஜயம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2016 12:10
இன்று மதுரை மீனாட்சி திக்விஜயம் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள். பாண்டிய நாட்டின் ராணியான மீனாட்சி, பட்டாபிஷேகம் முடிந்ததும் திக்விஜயம் (எல்லா நாடுகள் மீதும் படையெடுத்தல்) புறப்பட்டாள். எட்டு திசைகளின் பாலகர்களான இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வென்றாள். பின் சிவனின் கைலாயத்தைக் கைப்பற்ற சென்றாள். சிவனைப் பார்த்ததும் அவள் மனதில் நாணம் ஏற்பட்டது. “கொன்றைவார் சடையனான இவரே உன் மணாளன்” என அசரீரி ஒலித்தது. சிவனும், “நான் மதுரைக்கு வந்து உன்னை மணம் புரிவேன்” என வாக்களித்தார். இக்கோலத்தை தரிசித்தால் நல்ல மணவாழ்வு அமையும்.
நைவேத்யம்: எலுமிச்சை சாதம்,வெண்பொங்கல் பாட வேண்டிய பாடல் குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவிவெங் கூற்றுக்கிட்டவரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்துஅரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல் என்பாய்நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே.