செவ்வாய், வெள்ளிக்கிழமையில் சிலர் பணம் கொடுக்க மறுப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2016 04:10
செவ்வாய் முருகனுக்கும், வெள்ளி லட்சுமிக்கும் உகந்த நாட்கள். இவ்விரு தெய்வங்களும் செல்வத்தைத் தருவதுடன் அது நம் வீட்டில் நிரந்தரமாக இருக்கவும் அருள்பவர்கள். எனவே இவர்களது நாட்களாகிய செவ்வாயிலும் வெள்ளியிலும் பெட்டியிலிருந்து பணம் எடுப்பதைத் தவிர்ப்பது வழக்கம். அதற்காக அத்தியாவசியமான விஷயங்களுக்கு பணம் தர மறுப்பது தவறு. முதல் நாளே எடுத்து வைத்துக் கொடுக்கலாம்.