Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லலிதாம்பாளுக்கு சோபனம் சொல்லலாமா? குழந்தை வரத்துக்கு சஷ்டி விரதம்! குழந்தை வரத்துக்கு சஷ்டி விரதம்!
முதல் பக்கம் » துளிகள்
நவராத்திரியில் மூன்று சக்திகள் எதற்கு?
எழுத்தின் அளவு:
நவராத்திரியில் மூன்று சக்திகள் எதற்கு?

பதிவு செய்த நாள்

08 அக்
2016
05:10

நவராத்திரி என்றால் ஏதோ பொம்மைகளை வைக்கிறோம். நைவேத்யம் செய்கிறோம் என்பது கிடையாது. நவராத்திரி கொண்டாடுவதற்கு ஒரு தத்துவம் இருக்கிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குகிறோமே ஏன்? இதனை சற்றே சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் ரகசியம் புலப்படும். மனிதர்களாகப் பிறந்து விட்டால் கூடவே பயமும் பிறக்கிறது. அச்சம் இருந்தால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. நமது தயக்கம் நம்மை முன்னேற விடாமல் செய்துவிடும். தன்னம்பிக்கையும் தைரியமும் முதல் அவசியம். அதனால்தான் அதைத் தரும் துர்க்கையை நாம் முதல் மூன்று நாட்களுக்கு வணங்குகிறோம்.

தைரியத்தையும், தன்னம்பிக்கையும் பெற்றுவிட்டால் நமக்கு வெற்றிதான். வெற்றி வந்தால், கூட செல்வமும் வந்துவிடும். அந்த செல்வத்தைப் பெறுவதற்குத்தான் அடுத்த மூன்று நாட்களில் நாம் லட்சுமியை வணங்குகிறோம். மூன்றாவதாக உழைப்பால் உயர்ந்து, செல்வச் செழிப்போடு இருந்தால் மட்டும் போதுமா? இவற்றைப் பாதுகாக்க ஞானம் வேண்டாமா... இந்த ஞானத்தைப் பெறத்தான் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை வணங்குகிறோம். இந்த மூன்று தெய்வங்களையும் போற்றி வணங்கிய பிறகு விஜயதசமி கொண்டாடுகிறோம். விஜய என்றால் வெற்றி. வெற்றி என்றால் என்ன? அச்சம், மடமை, கர்வம் ஆகிய தீய எண்ணங்களைக் களைந்து நாம் நம்மை வெற்றி கொள்ளுதல். அதைத்தான் விஜயதசமியாகக் கொண்டாடுகிறோம். முப்பெரும் சக்திகளில் ஒன்று இல்லை என்றாலும் வாழ்வது கடினம். இவர்கள் மூவரும் ஒருவருடன் ஒருவர் பிணைந்துள்ளார்கள். இந்த அடிப்படை உண்மையை உணர்ந்து நாம் இம் மூன்று தேவியர்களை வழிபட்டு வந்தோம் என்றால் வாழ்வில் எங்கும் வெற்றிதான் விஜயம் தான்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் நல்லரவமே போற்றிஓம் நாக தேவனே போற்றிஓம் அரசடி அருள்பவரே போற்றிஓம் அபயம் அளிப்பவரே போற்றிஓம் ... மேலும்
 
temple news
* அதிகம் பேசாதே. செயலில் ஈடுபடு. இதுவே வெற்றிக்கான ரகசியம்.  * பிறரது கண்ணோட்டத்தில் பிரச்னையை அணுகு. ... மேலும்
 
temple news
* இடையூறு வந்தாலும் குறிக்கோளை அடைவதில் உறுதியாக இரு.  * வீட்டு வழிபாட்டால் குடும்பமும், கோயில் ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar