கோவை: சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழகம் முழுவதும் சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.
கோவை கே.கே புதூர் முத்துமாரியம்மன் கோவிலில் சரஸ்வதி பூஜை முன்னிட்டு சிறப்பு ஆலங்காரத்தில் அருள்பலித்தார். பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் கோவை அழகேசன் ரோட்டிலுள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மன் விஷ்ணு துர்க்கை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பழங்கள் மற்றும் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். கோவை ஈச்சனாரி விநாயகர் கோவிலில் விநாயகருக்கு குங்கும அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.