மகிஷாசுரனை துர்கை வதம் செய்ததே நவராத்திரி! மேற்கு வங்காளம், ஒடிசா, அசாம், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாழும், மடோவா மலைவாழ் மக்கள் தங்களை மகிஷாசுரனின் வழி வந்தவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர். இதேபோல் ஜார்கண்ட் பகுதியில் வாழும் அசூர் மலைவாழ் மக்களும் தங்களை மகிஷாசுரனின் வழி வந்ததாகக் கூறிக் கொள்வதுடன், தற்போது அவரை தங்கள் இனத்தினரின் குருவாகவும் மதிக்கின்றனர். இதனிடையே கர்நாடகாவில், சாமுண்டி மலைப்பகுதியை ஆண்டு வந்த மகிஷாசுரனை சாமுண்டேஸ்வரி வதம் செய்ததாகவும், மகிஷாசுரன் பெயரிலேயே மைசூர் எனப் பெயர் வந்ததாகவும் வரலாறு உண்டு.