அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பல்வேறு புராண கதைகளை விளக்கும் வகையில், ஏழு அடுக்கில் கொலு அமைக்கப்பட்டு, ஒன்பது நாள்கள் உபயதாரர்கள் கட்டளை செய்திருந்தனர். பக்தர்களுக்கு, ஒன்பது நாளும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை அரவக்குறிச்சி பிரதோஷ வழிபாட்டு மன்றத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.