Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆகாயத்தில் பயந்த யானை நன்றி சொல்லவே... வார்த்தை இல்லையே!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவன் எனக்கு நானே நல்லவன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2016
12:10

*நல்ல பேனா இருந்தால் மட்டும் போதாது. அது தானே எழுதப் போவதில்லை. அதை வைத்திருப்பவன் நல்லவனாக இருந்தால் தான் நல்ல செயல்களுக்கு வித்திடும் சரியான சொற்களை எழுத முடியும்.
*உள்ளத்தில் இருக்கும் அன்பை உன் கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் காண்பாய்.
*உலகில் யாரையும் சோம்பேறியாக வாழ கடவுள் படைக்கவில்லை. உன்னைத் தாங்கும் பூமி எப்போதும் சுழன்ற படியே இருக்கிறது. உழைத்து வாழ்வதில் தான் உண்மையான சுகம் என்பதை உணர்ந்திடு.
*மனதில் கர்வம் இருந்தால் பேச்சும், செயலும் முரண்படும். ஆனால் குற்றமற்ற மனிதனிடம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றுபட்டு இருக்கும்.
*உன் மனதை முகம் பார்க்கும் கண்ணாடி போல துõய்மையாக வைத்துக் கொள். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதை கடவுளுக்கு அர்ப்பணம் செய்து விடு.
*உலகத்தைச் சீர்படுத்துவது கடவுளின் பொறுப்பு. முதலில் உன்னை சீர்திருத்து. மற்றது தானாக நடக்கும்.
*பிறருடைய குறைகளை பேசிக் கொண்டு பொழுதை வீணாக்காதே. உண்மையான பக்தனின் கண்களில் கேடுகள் தென்படுவதில்லை.
*அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று சொன்னால் மட்டும் போதாது. அதை வாழ்வில் பின்பற்றவும் செய். அனைவரையும் உன் சகோதர, சகோதரிகளாகக் கருது.
*யார் வேண்டுமானாலும் மற்றவருக்கு உபதேசம் செய்யலாம். ஆனால் அதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது எளிதான விஷயம் அல்ல.
*தர்மத்தை கடைபிடித்து முறை தவறாமல் நல்வழியில் வாழத் தெரிந்தவனே சான்றோன். அவனால் இந்த உலகிற்கே நன்மை உண்டாகும்.
*இயற்கை தன்னிடமுள்ள செல்வத்தை எல்லாம் உலகிற்கு அளித்து மகிழ்வது போல, நீயும் உன்னிடமுள்ளதை கொடுப்பதில் மகிழ்ச்சி கொள்வாயாக.
*நியாயமற்ற வழியில் வந்த செல்வத்தை மனதால் கூட தீண்டாதே. அது உயிர் உள்ளவரை உன்னைச் சித்ரவதை செய்து கொண்டேயிருக்கும்.
*பொருளைத் தேடும் முயற்சியுடன், பிறருக்கு உதவி செய்து அருளையும் தேடிக் கொள். ஏனென்றால் இந்த உலகமே கடவுளின் குடும்பமாக இருக்கிறது.
*சத்திரத்தில் தங்கி இளைப்பாறுவது போல உயிர்கள் பூமியில் சிலகாலம் தங்கி விட்டுச் செல்கின்றன. யாருக்கும் இந்த உலகம் சொந்தமானது அல்ல.
*பிறருடைய கருத்தையும் செவி கொடுத்து கேள். அனைவரையும் மதிக்கக் கற்றுக் கொள். அப்போது உலகமே உன்னை மதிப்பதைக் காண்பாய்.
*பணியாள் போல அடக்கமுடன் இரு. இதனால் மனதில் ஆணவம் உண்டாகாது. வாழ்வில் பணிவுடன் இருப்பவன் எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவான்.
*கடவுளை நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், உணவு பிரசாதமாகி விடும். இதனால் மனமும், உடலும் பரிசுத்தம் அடையும். (சாந்தானந்தர்)

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar