Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லவன் எனக்கு நானே நல்லவன் பெரியவர் கொடுத்த பிச்சை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றி சொல்லவே... வார்த்தை இல்லையே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2016
12:10

ஒரு நடுத்தர வயது பெண்மணி காஞ்சிப்பெரியவரைத் தரிசிக்க வந்தார். அன்று பெரியவர் மவுனவிரதம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். பெரியவரிடம் பேச முடியாததால், அவரால் தன் குறையைச் சொல்ல முடியவில்லை. இப்படியே பத்து நாட்களாக தொடர்ந்து வந்தார் அந்தப்பெண். பதினோராம் நாளில் அந்த பெண் வருவதைக் கண்ட பெரியவர் உதவியாளரை அழைத்து, “ இந்த பெண்ணுக்கு என்ன கஷ்டமோ தெரியவில்லை. உடனே அழைத்து வா” என்று கூறினார். அவர், “பெரியவா! என் பொண்ணை பெரிய இடத்தில கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். வைரத்தோடும், இரட்டை வடம் சங்கிலியும் சீதனம் தர சம்மதிச்சோம். ஆனால் முடியாமல் போனது. என் மகள் இப்போது மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ முடியலை” என்று கண்ணீர் சிந்தினார். அப்போது மடத்திற்கு ஒரு பணக்கார பெண் பெரியவரைத் தரிசிக்க வந்தார். அவரிடம் பெரியவர், “எனக்கு உடனே நீ ஒரு உதவி செய்தாகணும்,” என்றார். அவரும் பணிவாக, “பெரியவா... அப்படி நீங்க ஒரு அனுக்ரஹம் பண்ணினா அது நான் செய்த பாக்கியம்” என்றாள். “உடனடியா ஒரு வைரத்தோடும், இரட்டை வடம் சங்கிலியும் உன்னால் தர முடியுமா?” என்றார் பெரியவர். பணக்கார பெண்மணியும் தான் அணிந்திருந்த வைரத் தோட்டை கழற்ற முயன்றாள். “கொஞ்சம் பொறு. சுமங்கலி காதணி இல்லாமல் இருக்கவே கூடாது” என்று சொல்லி தடுத்ததோடு, மடத்தின் நிர்வாகி மூலமாக வைரத்தோடுக்கு மாற்றாக தங்கத்தோடு ஒன்றை வரவழைத்துக் கொடுத்தார். பின் அந்தப் பெண்ணிடம், “வைரத்தோடு, இரட்டை சங்கிலி இரண்டையும் இந்த அம்மாவின் பொண்ணுக்கு சீதனமா கொடு. அவளை மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழ வை” என்று சொல்லி நடந்த விபரத்தை எடுத்துச் சொன்னார். பணக்கார பெண்ணும் ஆபரணங்களைக் கொடுத்து உதவினார். பெண்ணின் தாயாருக்கு பேச முடியாமல்  வார்த்தைகள் தடுமாறின. கண்களில் நீர்கோர்க்க பெரியவரிடமும், பணக்கார பெண்மணியிடமும் தன் நன்றியை வெளிப்படுத்தினார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar