பதிவு செய்த நாள்
18
அக்
2016
12:10
விழுப்புரம்: முதல்வர் ஜெ., பூரண குணமடைய வேண்டி, கோலியனுார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கோலியனுார் ஒன்றியம் நல்லரசன்பேட்டையில் உள்ள சுந்தர விநாயகர், செல்வ விநாயகர் கோவில்களில் நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் பிரேமா முருகன், துணை செயலாளர்கள் சீத்தா கலியபெருமாள், பவானி தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கிய அணி செயலாளர்கள் லதா கலியமூர்த்தி, கவிதா செந்தில்குமார், இளைஞரணி செயலாளர் சேட்டு என்கிற பார்த்தசாரதி, இணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பிரதிநிதி வித்யாபாலு, கிளை செயலாளர் உதயசூரியன், ஊராட்சி செயலாளர் சங்கர், மாணவரணி துணை தலைவர் பிரபாகரன், பாசறை செயலாளர் சீனு, எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.