கழுமரம் சிதம்பரேஸ்வரர் கோவிலில் முதல்வர் நலம்பெற கோபூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2016 12:10
திருக்கோவிலுார்: மணம்பூண்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முதல்வர் ஜெ. நலம்பெற வேண்டி, கழுமரம் சிதம்பரேஸ்வரர் கோவிலில், கோபூஜை நடந்தது. கழுமரம் சிவகாமசுந்தரி உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த வழிபாடு நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 108 பசுமாடுகள் நிறுத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கோபூஜை நடந்தது. ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமரன் கழுமரம் கூட்டுறவு வங்கி தலைவர் மகேந்திரன் கிளை செயலாளர் வெங்கடேசன் ஊராட்சி தலைவர் அலமேலு ஊராட்சி செயலாளர் வைத்தியநாதன் கோட்டகம் கிளை செயலாளர் குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் இளங்கோவன் தங்கராஜ் மணலுார்பேட்டை நகர செயலாளர் தங்கவேல் அரகண்டநல்லுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பாலு முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் நெடுஞ்செழியன் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் ஒன்றிய அவைத்தலைவர் துரைராஜ் மாவட்ட பிரதிநிதி மகாராஜன் தாமோதரன் ஒன்றிய பேரவை செயலாளர் பாலமுரளி, மாணவரணி செயலாளர் துரை இலக்கிய அணி செயலாளர் கமலக்கண்ணன் பாசறை செயலாளர் ஏழுமலை மாவட்ட மாணவரணி தலைவர் சீனிவாசன் பொருளாளர் பாஸ்கரன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் தமிழரசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.