திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு ஸ்ரீபெரும்புதூரில் விசேஷ வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19அக் 2016 12:10
ஸ்ரீபெரும்புதுார்: திருவள்ளூரில் இருந்து வீரராகவப் பெருமாள் நேற்று, ஸ்ரீபெரும்புதுார் வந்தார். ஸ்ரீபெரும்புதுார், ராமானுஜர் கோவில் குளக்கரையில், வேதாந்த தேசிகர் கோவில் அமைந்துள்ளது. புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரம், வேதாந்த தேசிகரின் அவதார தினம். இந்த தினத்தில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ஸ்ரீபெரும்புதுார் வருவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி, திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருவள்ளூரில் இருந்து வீரராகவ பெருமாள் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு மணவாள நகர், செங்காடு, மண்ணுார், தொடுகாடு, ஆயக்கொளத்துார் வழியாக நேற்று ஸ்ரீபெரும்புதுார் வேதாந்த தேசிகர் கோவிலை வந்தடைந்தார். பகல், 1:00 மணிக்கு வீரராகவ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு திருப்பாவை சாற்றுமறை, பெரிய மாட வீதிகளில் புறப்பாடு நடந்தது. இதை தொடர்ந்து திருவாய் மொழி சாற்றுமறை நடைபெற்று வீரராகவ பெருாள் ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து திருவள்ளூருக்கு அதிகாலை புறப்பட்டார்.