அம்மாபேட்டை: அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று சீர்வரிசை தட்டு ஊர்வலம் நடந்தது. அம்மாபேட்டையில் உள்ள குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை மற்றும் மீனாட்சி ஆகிய சுவாமிகளுக்கு நாளை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையடுத்து, நேற்று சீர்தட்டு ஊர்வலம், கோவிலில் புறப்பட்டு திரு.வி.க., தெரு, பழைய பிள்ளையார் கோவில் தெரு வழியாக, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. நாளை காலை, 10:15 மணியில் இருந்து, 11:00 மணிக்கு கும்பாபிஷேகமும், அதன்பின் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது.