வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியல் வசூல் ரூ.7.41 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20அக் 2016 12:10
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் உண்டியலில், பக்தர்களின் காணிக்கையாக, 7.41 லட்சம் ரூபாய் கிடைத்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம், நேற்று எண்ணப்பட்டது. கோவில் கட்டுப்பாட்டில் உள்ள, 10 உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டன. அதில், ஏழு லட்சத்து, 41 ஆயிரத்து, 557 ரூபாய்; 10 கிராம் தங்கம், 203 கிராம் வெள்ளி கிடைத்ததாக, கோவில் நிர்வாகிகள் கூறினர்.