பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
அம்மாபேட்டை: அம்மாபேட்டை குமரகுரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, மீனாட்சி அம்மனின் உற்சவர் சிலைகள் வாங்கப்பட்டன. அவற்றுக்கான பிரதிஷ்டை விழா, நேற்று சிறப்பு பூஜையுடன் நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம், அப்பகுதி மக்கள் சீர்வரிசை கொண்டு வந்து, கோவிலில் வைத்தனர். பின், அதைக்கொண்டு நேற்று மந்திரங்கள் ஓதி, காலை, 10:15 மணியில் இருந்து, 11 மணிக்குள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவ தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.