வடமதுரை, வடமதுரை திருச்சி ரோட்டில் மங்கம்மாள் கேணி அருகில் பழமையான சர்வ சக்தி விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் தற்போது தகர மேற்கூரையுடன் திறந்தவெளியாக உள்ளது. இக்கோயிலை புதுப்பிக்க ஊர்மக்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று காலை திருப்பணி துவக்கமாக பாலாலய பூஜை நடந்தது. பக்த ஆஞ்சநேயர் கோயில் அர்ச்சகர் நாராயணன், சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர் பாலாஜி ஆகியோர் பூஜைகளை நடத்தினர். ஊர் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.