திருப்போரூர்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா, கொடியேற்றத்துடன் இன்று துவங்குகிறது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை, 6.00 மணிக்கு மேல், 7.00 மணிக்குள்ளாக கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, தொடர்ந்து, ஏழு நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 5ம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது.