திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. காலையில் சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டு, பக்தர்களுக்கு காப்பு கட்டப்படும். திருப்பரங்குன்றம், மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள், திரு விழா நடைபெறும் ஆறு நாட்களும் கோயில் மண் டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். வழங்கமாக ஒருநாளுக்கு முன்புதான் கோயில் மண்டபங்களில் சாக்பீஸால் இடங்களை ரிசர்வ் செய்தும், போர்வை விரித்தும் இடம் பிடிப்பர். இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல்நாளே போட்டிபோட்டு இடங்களை ரிசர்வ் செய்து வருகின்றனர்.