Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணியில் கந்த சஷ்டி ... விருதுநகர் முருகன் கோயில்களில் துவங்கியது கந்தசஷ்டி விருதுநகர் முருகன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
தேனி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

01 நவ
2016
11:11

தேனி : மாவட்டத்தின் பல்வேறு பகுதி முருகன் கோயில்களில் கந்த சஷ்டி திருவிழா நேற்று துவங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவக்கினர். தேனி: தேனி கணேச கந்த பெருமாள் கோயில், வேல்முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில், கந்த சஷ்டிவிழா காப்புகட்டுதல், மூலவருக்கு சிறப்பு பூஜையுடன் துவங்கியது. தினமும் மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. இரவு சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார்.

விரதம் துவக்கினர்: ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி ஏழுநாள் விரதம் துவக்கினர். நவ.,5 மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம், நவ.,6ல் பாலசுப்பிரமணியசுவாமி, தெய்வானை, வள்ளியுடன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில்நிர்வாகம் , மண்டகப்படிதாரர்கள் செய்துள்ளனர்.

கூடலுார்: கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் 19 வது ஆண்டு கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, காலையில் சுவாமிக்கு பால் அபிஷேகத்தைத் தொடர்ந்து, சர்வ அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, விரதத்தைத் துவக்கினர். தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறும் விழாவில், தினந்தோறும் காலையில் சமய சொற்பொழிவு நடைபெறும். ஆறாம் நாளில் சூரசம்ஹாரம் , ஏழாம் நாளில் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar