பதிவு செய்த நாள்
03
நவ
2016
12:11
பவானி: பவானி, பழனிபுரம் சக்தி விநாயகர், இருசாயி அம்மன், கன்னிமார் கோவில் பொங்கல் விழா நேற்று நடந்தது. பவானி, பழனிபுரம் முதல் வீதியில் உள்ள சக்தி விநாயகர், இருசாயம்மன், கன்னிமார் கோவில் பொங்கல் விழா நேற்று தொடங்கியது. காலை, 8:00 மணிக்கு, கூடுதுறையிலிருந்து, புனித தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. பகல், 11:00 மணியளவில் சுவாமிகளுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதையடுத்து, பக்தர்கள் பொங்கல் வைத்தனர். வரும் 6ல், மறுபூஜை நடத்தப்பட்டு விழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, இருசாயி அம்மன் கோவில் பொங்கல் விழா குழுவினர் செய்திருந்தனர்.