பதிவு செய்த நாள்
04
நவ
2016
12:11
ராசிபுரம்: ராசிபுரம், மாரியம்மன் கோவில் திருவிழாவில், தேர் உற்சவம் நடந்தது. ராசிபுரம் தாலுகா, செல்லாண்டியம்மன், நித்யசுமங்கலி மாரியம்மன், ஆஞ்சயேர் திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது. இந்தாண்டு திருவிழா, கடந்த, அக்., 18ல் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் பல்வேறு பிரிவை சேர்ந்தவர்கள், மாரியம்மனை வீதி உலா அழைத்து வந்தனர். கடந்த, 1ம் தேதி, கொடியற்றமும், நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் அக்னி குண்டம் பிரவேசித்தலும் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, கோவில் தேர் உற்சவம் நடந்தது. சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, தேரை வடம் பிடித்து இழுத்து, துவக்கி வைத்தார். பெரிய கடை வீதியில் இருந்து, சின்னக்கடை வீதியாக, பூக்கடை வீதியில் நிறுத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள், தேர் உற்சவத்தில் கலந்து கொண்டனர்.