Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய சிறப்பு! சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்? சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்துவது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணவாள மாமுனிகள் அவதார தினம்: பட்டு குடைகளுடன் வீதி உலா!
எழுத்தின் அளவு:
மணவாள மாமுனிகள் அவதார தினம்: பட்டு குடைகளுடன் வீதி உலா!

பதிவு செய்த நாள்

04 நவ
2016
02:11

சென்னை: வைணவ ஆச்சாரியார் மணவாள மாமுனிகளின் அவதார தினத்தை முன்னிட்டு பட்டு குடைகளுடன், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மற்றும் மணவாள மாமுனிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கி.பி. 1370-ம் வருடம் ஐப்பசி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆழ்வார் திருநகரியில் அவதரித்தவர் மணவாள மாமுனிகள். இவரது இயற்பெயர் அழகிய மணவாள நாயனார். முதலில் தன் தந்தையிடமும் பிறகு பிள்ளை லோகாச்சாரியாரிடமும் சாஸ்திரங்களைக் கற்றார். அதன்பிறகு பிள்ளை லோகாச்சாரியாரின் சிஷ்யர் திருவாய்மொழிப் பிள்ளையிடம் ஆழ்வார்களின் அருளிச் செயலைக் கற்றார். இந்த ஆசார்யன், மணவாள மாமுனிகளிடம், முந்தைய குருபரம்பரை ஆசார்யர்கள் வகுத்தவற்றை உபன்யாசமாக எங்கும் பரப்பச் சொன்னார். ஆதிசேஷனின் அவதாரங்களாக லட்சுமணன், பலராமன், ராமானுஜர் ஆகியோர் குறிப்பிடப்படுவர். இவர் ராமானுஜரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் யதீந்திர ப்ரவணர் என்று திருவாய்மொழிப் பிள்ளையால் சிறப்புப் பெயர் பெற்றார். ராமானுஜரின் ஆயுட்காலம் 200 ஆண்டுகள் எனவும், ஆனால் அவர் தமது 120வது வயதிலேயே சித்தியடைந்துவிட்டதால் மீதமுள்ள 80 ஆண்டுகளை மணவாள மாமுனிகளாக எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் சொல்வர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், திருமாலிருஞ்சோலை, திருவரங்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தலங்களுக்குச் சென்ற மாமுனிகள், காஞ்சியில் கிடாம்பி நாயனாரிடம் பாஷ்யம் கேட்டறிந்தார். ஆன்மிகப் பணிக்கு இல்லறம் ஏற்றதாக இல்லையென்று, திருவரங்கத்தில் மகான் சடகோப ஜீயரிடம் துறவறம் ஏற்று, மணவாள மாமுனிகள் என்று திருநாமம் பெற்றார். எறும்பியப்பா என்பவர் மாமுனிகளின் சீடராக விரும்பினார். ஆனால் அது நடக்கவில்லை. வருத்தத்துடன் சொந்த ஊர் திரும்பினார். ஒரு நாள் அவர் கனவில் ராமபிரான் தோன்றி, நீர் மணவாள மாமுனிகளிடமே சென்று சேரும் என்று கூற, மறுபடியும் ஸ்ரீரங்கம் வந்து மாமுனிகளின் சீடர் ஆனார். மணவாள மாமுனிகள்மீது பொறாமை கொண்ட சிலர் ஒருசமயம் அவரது குடிலுக்குத் தீ வைத்தனர். ஆனால் மாமுனிகளோ தன் சுயரூபமான நாகவடிவம் பெற்று குடிலிலிருந்து வெளிவந்து, கூட்டத்தோடு கலந்தார். இதை அறிந்த அவ்வூர் அரசன் குற்றவாளிகளைப் பிடித்துத் தண்டிக்க முயன்றார். மாமுனிகளோ அவர்களை மன்னித்தருளினார்.

மணவாள மாமுனிகளின் திருவாய்மொழி உபன்யாசத்தை ஸ்ரீரங்கம் பெரிய மண்டபத்தில் தொடர அருளிய பகவான் ஸ்ரீரங்கநாதர், அதை செவிமடுத்தது தனிச் சிறப்பு. ஒருநாள், இவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தபோது ஒரு சிறுவன், கூட்டத்தாரை விலக்கிக் கொண்டு, மாமுனிகளிடம் ஓர் ஓலையைக் கொடுத்து திடீரென மறைந்து போனான். அதில் சைலேசரின் கருணைக்கு உரியவரும் ராமானுஜரின் பக்தருமான அழகிய மணவாள மாமுனிகளை வணங்குகிறேன் என்று எழுதியிருந்தது. குருபரம்பரையின் கடைசி ஆசார்யரான மாமுனிகள், உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, ஆர்த்தி பிரபந்தம் ஆகியவற்றை அருளியதுடன் பிற ஆசார்யர்களின் அருளிச்செயல்களுக்கு உரையும் எழுதியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar