ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மற்றும் மலேஷிய அமைச்சர் நேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 10.50 மணிக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி செல்லமேஸ்வர் தனது குடும்பத்துடன் ஆண்டாள் கோயில் வந்தார். மாவட்ட நீதிபதி சிவக்குமார் மற்றும் நீதிபதிகள் ராஜலட்சுமி, வசந்தி, சிங்கராஜ், பரமசிவம், பசும்பொன் சண்முகையா, நித்யகலா, கோயில் சார்பில் செயல்அலுவலர் ராமராஜா வரவேற்றனர். ஆண்டாள் கோயில், வடபத்ரசயனர் சன்னிதிகளில் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காலை 9.50 மணிக்கு மலேஷிய கல்வி அமைச்சர் கமலநாதன், கோயிலுக்கு வந்தார். ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றார். சின்னையா டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரு வி.ஐ.பி., க்கள் வரும்போதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.