எரியோடு: எரியோடு சித்துாரில் வீருதம்மாள், ஏரசிக்கம்மாள், வீருசிக்குபாட்டையா மாலை கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஒக்கலிகர் ஆவுனவோர் குலத்தினருக்கு பாத்தியப்பட்ட இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த நவ.4ல் துவங்கியது. தீர்த்தக்குடங்கள் அழைப்பு, நான்கு கால யாக பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9:10 மணிக்கு கடங்கள் புறப்பாடாகி கோபுர கலசங்களில் புனித நீருற்றினர். திண்டுக்கல் நாகராஜ சிவாச்சாரியர் குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கோவை விஜயலட்சுமி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஓ.ஆறுமுகசாமி, முன்னாள் ஐகோர்ட் நீதிபதி முருகேசன், முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் நடராஜன், முன்னாள் ஊராட்சி தலைவர் வடிவேல் பங்கேற்றனர்.