தளவாய்புரம்: தளவாய்புரம் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கடந்த 30 ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது.தினமும் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சென்று, சூரபத்மனை வதம் செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து முருகன், வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா, அன்னதானம் நடந்தன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். *சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள சுப்பிரமணியர் சுவாமி கோயில் கந்தசஷ்டி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு சுவாமி தினமும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். சஷ்டியன்று விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலையில் சூரசம்ஹாரம் நடந்தது.