பதிவு செய்த நாள்
08
நவ
2016
11:11
பொன்னேரி: கந்த சஷ்டி விழாவை தொடர்ந்து, சுப்ரமணிய சுவாமிக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. பொன்னேரி, திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் கோவிலில், வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி சன்னிதி உள்ளது. கந்த சஷ்டியை முன்னிட்டு, கடந்த, 30ம் தேதி முதல், தினமும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வந்தன. கந்த சஷ்டியின் கடைசி நாளில், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம், மாலை 6:00 மணிக்கு, வள்ளி, தேவசேனா, சுப்ரமணிய சுவாமி உற்சவ பெருமானுக்கு திருக்கல்யாணம் வைபவம் வெகு விமரிசையாக நடந்தது. முன்னதாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள வரசக்தி விநாயகர் கோவிலில் இருந்து, சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. இரவு, 7:30 மணிக்கு, திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இதில், தடப்பெரும்பாக்கம், திருவேங்கிடபுரம், பொன்னியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று, முருக பெருமானை தரிசித்து சென்றனர்.