சபரிமலை மண்டல சீசன் ஏற்பாடுகள் தென் மாநில அமைச்சர்கள் கூட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2016 12:11
திருவனந்தபுரம்: சபரிமலை சீசனில் செசய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்மாநில அமைச்சர்கள் கூட்டத்தை கேரள முதல்வர் பிணறாய் விஜயன் தொடங்கி வைத்தார். சபரிமலை மண்டல மகரவிளக்கு சீசனில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து அதிகமாக பக்தர்கள் வருகின்றனர். இவர்களுக்கான வசதிகளை செசய்வது பற்றி விவாதிக்கும் வகையில் திருவனந்தபுரத்தில் நேற்று தென்மாநில தேவசம்போர்டு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கானா தேவசம்போர்டு அமைச்சர் இந்திர கரன் ரெட்டி, கர்நாடகா தேவசம்போர்டு அமைச்சர் ராமலிங்கரெட்டி, தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முகமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தை தொடங்கி வைத்து கேரள முதல்வர் பிணறாய் விஜயன் பேசினார். தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய், ராகவன், சபரிலை உயர் மட்ட கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மற்றும் தேவசம் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சபரிமலையில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வருவதை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை அந்தந்த மாநிலங்களில் ஏற்படுத்தும் படி இந்த கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.