பதிவு செய்த நாள்
12
நவ
2016
11:11
குறிச்சி: ஈச்சனாரி அருகே, கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஈச்சனாரியிலிருந்து, மதுக்கரை மார்க்கெட் செல்லும் ரோட்டில், குழந்தைவேல் நாச்சம்மாள் நகரில், கற்பக விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விமானம், கோபுரம், அர்த்தமண்டபம், தீர்த்த விநாயகர், சர்பதேவதைகள் அமைக்கும் பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில், தேவதா அனுக்ஞை, வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், தீபாராதனையும், இரவு கற்பக வினாயகர் அஷ்டபந்தனம், பிரதிஷ்டை ஆகியவையும் நடந்தன. நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், கடங்கள் புறப்பாடும் நடந்தன. 6:00 மணிக்கு, கற்பக விநாயகர், கோபுரம் மற்றும் தீர்த்த வினாயகர் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகத்தை, கதிரேசசிவம் குழுவினர் நடத்தினர். தொடர்ந்து அன்னதானமும், இரவு தசதரிசனம், தனதானம், மகா தீபாராதனை மற்றும் பிரசாத வினியோகமும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று, விநாயகரை தரிசித்து சென்றனர். இனறு முதல், 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் விழா குழுவினர் செய்துள்ளனர்.