பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
உளுந்துார்பேட்டை: காட்டுநெமிலி கிராமத்தில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா காட்டுநெமிலி கிராமத்திலுள்ள சித்திவிநாயகர், முத்துமாரியம்மன், அங்காளபரமேஸ்வரி, ஐயனார்பூரணி, பொற்கலை, நவக்கிரஹம், சுப்ரமணியர் சிவலிங்கம், பெரியாயி, பாவடைராயன், துர்கை, சுடலைகாளி, வீரபத்திரன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 9:30 மணிக்கு கோபுர கலசத்திற்கும், மூலாலயத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சாய்ராம், ஸ்ரீவிநாயகா மெட்ரிக் பள்ளி தாளாளர் நமச்சிவாயம், ஸ்ரீபிரசன்ன பவன் ேஹாட்டல் உரிமையாளர் ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.