கண்டாச்சிபுரம: கண்டாச்சிபுரம் அடுத்த ஒதியத்துார் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை கோ-பூஜை, பூர்ணாஹூதி யாகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முத்துமாரியம்மன், முருகன் மற்றும் நவக்கிரகங்களுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா முருகேசன், சிவாச்சாரியார்கள் கவுரிசங்கர், அய்யப்பன் செய்தனர்.