பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
ஸ்ரீவில்லிபுத்துார். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலுக்கு தங்க விமான கோபுர கும்பாபிஷேகம் முடிந்த பின் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உயர் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்கட்சியினர் என ஏராளமானவர்கள் ஆண்டாளை தரிசித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஸ்டாலின் மனைவி துர்கா, விஜயகாந்த், பிரேமேலதா உட்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் வந்து ஆண்டாளை தரிசித்தனர். இதையடுத்து பல்வேறுத்துறை முக்கிய பிரமுகர்கள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் என ஏராளமானவர்கள் ஆண்டாள் மற்றும் வடபத்ரசயனர் சன்னிதிகளில் தரிசனம் செய்து வருகின்றனர்.
அமைச்சர்கள்இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்களில் பணியாற்ற வந்துள்ள கட்சி பிரமுகர்கள், ரகசியமாக ஆண்டாள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு காலை 7 மணிக்கே செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னறிவிப்பு இன்றி ஆண்டாள் கோயிலில் சவாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு தி.மு.க., முன்னாள் அமைச்சர் பூங்கோதை தரிசனம் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகடந்த வாரத்தில் மலேசிய கல்வி மந்திரி கமலநாதன், உச்ச நீதிமன்ற நீதிபதி என பலர் முன்னறிவிப்பின்றி ஸ்ரீவி., ஆண்டாளை தரிசித்து சென்றனர்.இடைத்தேர்தல் பணியாற்ற வந்துள்ள பிற மாவட்ட தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண்டாளை தரிசித்து செல்வதால், கோயில் பகுதிகளில் வெளிமாவட்ட வாகனங்களை அதிகம் காணமுடிகிறது.