பதிவு செய்த நாள்
12
நவ
2016
12:11
பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூரில், விநாயகர் சுப்ராய கோவில் மஹா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், 11வது வார்டு, பேளூர் சாலையில் உள்ள, சுப்ரமணியர் கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, தீபாராதனை, காலை, 6:00 மணிக்குமேல், 7:30 மணிக்குள், விநாயகர், சுப்ரமணிய சுவாமி, நாகர் மற்றும் விமான கோபுரத்துக்கு, கும்பாபிஷேகம் நடந்தது. அதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர்.