குளித்தலை: குளித்தலை அருகே மேட்டு மருதூரில் உள்ள, ஆரா அமுதீஸ்வரர் கோவில், கி.பி., 996ல் சோழர் காலத்தில் கட்டப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது, போதிய பராமரிப்பின்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதலமடைந்து வருகிறது. இந்த கோவில் மூலம் போதிய வருமானம் இல்லாததால், அறநிலையத் துறையினர் கண்டுகொள்வதில்லை. இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க சிற்பங்கள், தூண்கள், மண்ட பகங்கள் மெல்ல மெல்ல சிதைத்து வருகிறது. இப்போது சீரமைக்காவிட்டால், முற்றிலும் சிதைந்து போகும் அபாய நிலை உள்ளது. எனவே, கோவிலை சீரமைக்க வேண்டியது அவசியம்.