திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம், பூஜைகள் நடந்தது.சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து அன்னாபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் மூலவர், சன்னதி தெரு சொக்கநாதர் கோயிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.மலைக்குப்பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமான், பஞ்சலிங்கத்திற்கு அன்னம் சாத்துப்படி செய்து, பழங்கள், காய்கறிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.