காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்போற்சவம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2016 11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் மூன்று நாள் தெப்போற்சவம் விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.காஞ்சிபுரத்தில் முக்கிய சிவன் கோவில்களில் ஒன்றாக கச்சபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாக குளத்தில் தெப்போற்சவம் நடந்து வருகிறது. நேற்று இரவு, 7:00 மணிக்கு சுந்தராம்பிகை அம்பாளுடன் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு, 7:30 மணிக்கு குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் வந்தனர். வாண வேடிக்கைகள் நடந்தன. இந்த விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது.