இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில், இருக்கண்குடி மாரியம்மன் கோவில் உதவி ஆணையர் வில்வமூர்த்தி,ராமநாதபுரம் அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தரேஸ்வரி முன்னிலையில்,பரம்பரை டிரஸ்டி வெங்கடேசன் செட்டியாரால் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரொக்கம் ரூபாய் 8 லட்சத்து 44 ஆயிரத்து 393ம், தங்கம் 102 கிராம்,வெள்ளி 47 கிராம் கிடைத்தது.