வீரட்டானேஸ்வரர் கோவிலில் சுப்ரமணியருக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17நவ 2016 12:11
திருக்கோவிலுார்: கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. திருக்கோவிலுார்‚ கீழையூர்‚ வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியருக்கு, கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு மகா அபிஷகம்‚ அலங்காரம்‚ தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தில்‚ லட்சார்ச்சனை‚ மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர்.