பதிவு செய்த நாள்
17
நவ
2016
12:11
திருவண்ணாமலை: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று திருவண்ணாமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் சென்றார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மனைவி துர்கா, நேற்று மாலை, 6:30 மணிக்கு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்தார். அருணாசலேஸ்வரர், உண்ணமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளை வணங்கி, நவக்கிரக சன்னதியில் நெய் தீபமேற்றி வழிபட்டார். பின் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 14 கி.மீ., தூரம் கிரிவலம் நடந்து சென்றார். அவருடன், நான்கு பெண்கள் மட்டும் நடந்து சென்றனர்.