பதிவு செய்த நாள்
18
நவ
2016 
12:11
 
 கோபி: கோபி பச்சமலை காலபைரவர் கோயிலில், வரும், 21ல் பைரவாஷ்டமி விழா, 108 சங்காபி?ஷக விழா நடக்கிறது. அன்று, மாலை, 3:00 முதல், 6:00 மணி வரை அஷ்ட பைரவர் மகா ஹோமம், மாலை, 6:00 மணிக்கு கால பைரவர் மகா அபிஷேகம், மாலை, 6:30 மணிக்கு, 108 சங்காபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு பரிகார அர்ச்சனை, மகா தீபாராதனை நடக்கிறது. இதில் கலந்து கொண்டால், சனி பகவான் தொல்லைகள் நீங்கும், சகோதர ஒற்றுமை ஏற்படும், எதிர்ப்புகள் அகலும், குழந்தை பாக்கியம் கிட்டும், நாகதோஷம் விலகும் என்று அர்ச்சகர்கள் தெரிவித்தனர். அஷ்டமி பரிகார அர்ச்சனை செய்ய விரும்புவோர், 10 ரூபாய் செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.